தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே எம் நாட்டின் முதுகிலெழும்பு குறைந்தளவு வசதியுடன் பெரும் வெற்றிகளைப் படைப்போம் நம்பிக்கை என்னும் பெரும் பலத்துடன்.

Sunday, June 8, 2008

உலகில் மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் வழமையே ஆனால் எத்தனையோ மனிதர்கள் பிறந்து வாழ்ந்து இந்த உலகில் அடையாளம் தெரியாமலே போய்விடுகின்றார்கள். தன் இனத்திற்காகவும் தன் நாட்டுக்காகவும் பிறருக்காகவும் வாழ்ந்து மறையும் மனிர்கள் மனித குலத்தில் அடையாளச்சிற்பிகள் தன் இனத்தால் என்றும் பூஜிக்கப்படுவவர்கள்.

Saturday, April 26, 2008

நாங்கள் ஏதாவது ஒன்றை உருவாக்க பல முயற்ச்சிகளை எடுத்து இறுதிக்கட்டத்தில் அதில் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்து இருக்கலாம். அல்லது தற்காலிகமாக கைவிட்டு இருக்காலாம். அந்த தோல்விக்கும் கைவிடலுக்கும் காரணம் நல்ல நன்பர்கள் எம்மோடு இல்லாமல் போனதே நல்ல நன்பர்கள் எம்மோடு இருந்தால் நாங்கள் எதையும் நம்பிக்கையுடன் செய்யலாம் நல்ல நன்பர்கள் நாம் அடையப்போகும் வெற்றியின் படிக்கற்கள்.

Wednesday, April 16, 2008

ஒவ்வொரு மனிதனுற்கும் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு இலட்சியம் இருக்கும் . அவ்வளியில் சென்று வெற்றி பெற முயலும் போது பல தடைகள் இருக்கலாம். அந்த தடைகள் தானக வருவதைவிட எம்மை வெற்றியடைய விடக்கூடாது என்பதில் எம்மைச்சுற்றி பல மனிதர்கள் தடைகளை உருவாக்கி உள்ளர்கள் அவர்களால் போடப்பட்ட தடைகளை தாண்டிச்சென்று வெற்றியின் இறுதிக்கட்டத்தை அடைய உன்னிடம் உள்ள கடசிப்பலத்தை அவர்களுக்கு கடைசி இலக்கு வரும் வரை காட்டி விடாதே நீ சறுக்கி விழுந்து விடுவாய் .......................?

உன்னுடைய இலட்சிய பாதையில் சென்று வெற்றி பெறுவதற்கு பல தடைகள் காத்து இருக்கின்றது நீ சோர்ந்து விடாதே நீ உன்னுடைய இலட்சியக்கனவை அடைவதற்காக கட்டப்பட்ட நம்பிக்கையை அசைத்துப்பாற்க நினைத்தாலே நீ அடையப்போகும் வெற்றியின் பாதை தடுமாறிவிடும்.

Sunday, January 27, 2008

எங்கள் வாழ்கையும் இறப்பும் பிறருக்காவும் நம் நாட்டுக்காவும் இருக்குமாயின் நாங்கள் வாழ்ந்த நாட்களும் இறந்த நாளும் நாம் வாழவைத்தவர் மனங்களில் உடலற்ற உயிராக இருப்பதுடன் நம்
நாட்டில் என்றும் நிலைத்திருக்கும்.

Wednesday, January 23, 2008

நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கு உதவக்கூடிய அனைவருடனும் அமைதியாகவும் பணிவுடனும் நடந்து கொண்டு உங்கள் வெற்றிக்கான தேவைகளை அடைவதற்கு முயலுங்கள். ஏனெனில் எமது இரு கைகளுக்கும் விரல்கள் எவ்வளவு முக்கியமோ அதைப்பேல் நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கும் அமைதியும் பணிவும் முக்கியம் இவ் இரண்டையும் சிலர் பலவினமாக கருதி உங்கள் தலையின் மீது ஏறி நடக்கவும் செய்வார்கள். அதை நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கு ஒரு தடைக்கல் என நினைத்து பொறுமையுடன் முயற்சியுங்கள். சிறிது காலத்தில் உங்கள் பொறுமையினதும் பணிவினதும் உன்மையினை புரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் வரும்.

Sunday, January 20, 2008

வேதனைகளும் சோதனைகளும் யாருக்கும் எப்பவுமே நிரந்தரம் இல்லை பொறுமையுடன் முயற்ச்சியுங்கள் நீங்கள் அடையப்போகும் வெற்றி உங்களைதேடிவரும்.